திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது 17.12.2018 அன்று தொடங்கப்பட்டதுதிருப்பூர் ஒன்றியத்தில் சராசரியாக  நாளொன்றுக்கு 240000 லிட்டர் பால் 15929 விவசாயிகளிடம் இருந்து 441 சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறதுபுதிதாக தொடங்கப்பட்டுள்ள இவ்வொன்றியத்திற்க்கென நாளொன்றுக்கு 50000 லிட்டர் பாலை கையாளும் வகையில் சங்கரண்டாம் பாளையத்தில் 1 குளிர்வூட்டும் நிலையம் மற்றும் நாளொன்றுக்கு 175000 லிட்டர் பாலை கையாளும் வகையில் 33 BMC களும் உள்ளன. மேலும், இவ்வொன்றியத்திற்கென பதப்படுத்தும் பால்பண்ணை இல்லை.

  • இதர வசதிகள்:

             குளிர்வூட்டும் வசதி   - 33 BMC – 175000 லிட்டர் (நாளொன்றுக்கு)

             BMC (திருப்பூர்)       - 10000 லிட்டர் (நாளொன்றுக்கு)

             குளிர்வூட்டும் நிலையம் (சங்கரண்டாம்பாளையம்) – 50000 LPD

              மற்ற பண்ணையில் குளிர்வூட்டும் பாலின் அளவு43000 LPD  (கோவை & ஈரோடு)   

  • திட்டங்கள்:
    1. விற்பனைப் பிரிவு மற்றும் 4 தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்கள் அமைப்பதற்கு ரூ. 4.95 கோடி மதிப்பிலான திட்டம் தமிழக அரசால் கடந்த 2019-2020 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    2. திருப்பூர் ஒன்றிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கு ரூ.3.55 கோடிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 2019-2020 ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட்த்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
    3. சங்கரண்டாம் பாளையத்தில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் பாலை குளிர்வூட்டும் வகையிலும், 0.5 லட்சம் லிட்டர் பாலை  பதனிடும் வகையிலும்  பால்பண்ணை  அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    4. திருப்பூர் ஒன்றியத்தின் கீழ் 1 உயர் தொழில்நுட்ப பாலகம் மற்றும் 4 சிறு பாலகங்களும் உள்ளன. எதிர்வரும் காலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 7 பாலகங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாலகங்களின் விவரங்கள்:திருப்பூர் ஆட்சியாளர் அலுவலக பாலகமானது ஒன்றியத்தின் நேரடி கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கட்டணமானது 10 நாட்களுக்கு ஒருமுறை செலுத்தப்பட்டு வருகிறது.