விருதுநகர் ஒன்றியம் :

        விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்  01.04.1986 ஆண்டு இராம்நாடிலிருந்து சிவகங்கை மற்றும் விருதுநகராகப் பிரிந்து ஆரம்பிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டபிரிவின் கீழ் 16.12.1985 முதல் பதிவு செய்யப்பட்டு,  01.04.1986 முதல் செயல்பட்டு வருகின்றது, இவ்வொன்றியம் மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி  மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு, 116 கிராம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் %லம் சராசரியாக 20000 லிட்டர் அளவில் நாளொன்றிற்கு பால் கொள்முதல் செய்து வருகின்றது. இந்த மாவட்டத்தில் தினசரி 50,000 லிட்டர் பால் கொள்ளளவு உள்ள ஒரு பால் பண்ணை ஸ்ரீவில்லிபுத்தூரிலும், 10,000 லிட்டர் பால் கொள்ளளவு உள்ள ஒரு பால் பண்ணை விருதுநகரிலும், நான்கு குளிர்விப்பான் நிலையம் தொடங்கும் நிலையில் உள்ளது. விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் சுமார் 54514  சங்க உறுப்பினர்களில் 24059 சங்க உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தினரையும், சுமார் 30455 சங்க உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும் கொண்டு செயல்பட்டு வருகின்றது

        தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 கால்நடை மருத்துவப் பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் செயற்கைமுறை &வூட்டல், அவசரசிகிச்சை மற்றும் மலட்டுத்தன்மை நீக்குதல் முதலிய மருத்துவ சேவைகள் நமது சங்கக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 13396 கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கால்நடை காப்பீட்டுத்திட்டம் மற்றும் கால்நடைகளுக்கான தேசிய செயற்கைமுறை கருவூட்டல் திட்டம் (NAIP-I,NAIP-II,NAIP-III) முதலிய திட்டங்கள் நமது ஒன்றியத்தில் உள்ள தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இயங்கும் 3 நடமாடும் கால்நடை மருத்துவர்கள் %லம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்பண்ணையில்  NABARD 2018-19 திட்டத்தின் கீழ் பால் உபபொருள்களான நெய், பனீர், பால்பேடா, பாதாம் மிக்ஸ் போன்றவை தயார் செய்ய ௹. 1900.00/- இலட்சத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தற்போது மாதம் ஒன்றுக்கு 40 மெட்ரிக் டன் அளவிற்கு நெய்யும், பனீர் சோதனை ஓட்டம் முடிந்து முழு திறனில் செயல்பட தயாராக உள்ளது.

        மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் 2017-18 அறிவிப்பின்படி தரமான கால்நடை தீவனம் அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் சரியான விலையில் கிடைக்கும் வண்ணம் விருதுநகர் குளிர்விப்பான் நிலையத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட கால்நடை கலப்புத்தீவன .ஆலை NADP திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானியத்தில் ௹. 1618.00/- இலட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 2018-19 அறிவிப்பின்படி ௹. 250.00/- இலட்சம் திட்டமதிப்பீட்டில் 50 ஆவின் பாலகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 25 பாலகங்களுக்கான கட்டுமானப் பணி நிறைவுற்று செயல்படுத்தப்பட்டுள்ளது. இதர பாலகங்கள் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 இடங்களுக்கு கட்டுமானப் பணிகள் நிறைவுற்று மற்றும் 2 இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 9500 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. உபரிப்பால் 9000 லிட்டரை கன்னியாகுமரி ஒன்றியத்திற்கு சுழற்சி முறையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.