ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
கூட்டுறவு அமைப்பின் பிரபலமாக அறியப்படும "ஆனந்த்" 3 அடுக்கு முறையில் மாநில அளவிலான தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு TCMPF)க்கும், கிராம அளவில் உள்ள பால் உற்பத்தியாளர்கள கூட்டுறவு சங்கங்களுக்கும் நடுவில் உள்ள மாவட்ட அளவில்லான சிறப்பான கூட்டுறவு ஒன்றியம் ஆகும்.
இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் தேசிய பால்வள வாரியம், (ஆனந்த்) நிதியுதவி அளித்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் சமூக பொருளாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நாடு தழுவிய வெள்ள நடவடிக்கை திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்கு நிதி யளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம(நுனுஊஆPரு); தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 1961 (1961 சென்னை சட்டம் 53) இன் கீழ் 07.02.1975 அன்று கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட்டு 01.01.1976 அன்று முதல் செயல்படத் தொடங்கியது.
உற்பத்தி துவக்கம் 01.03.1981
மொத்த பரப்பளவு 52.09 ஏக்கர்
செயல்பாட்டிலுள்ள தாலுக்கா 10 தாலுக்கா
தற்போது ஈரோடு ஒன்றியம், ஒன்றியத்துடன் இணைந்த 526 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் 29,357 பால் ஊற்றும் உறுப்பினர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்து வருகிறது. தினசரி பால் கொள்முதல் நாளொன்றுக்கு சுமார் 2.30 லட்சம் லிட்டர் ஆகும். உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பால் 52 மொத்த தொகுப்பு பால் குளிர்விப்பான்களில் குளிவிக்கப்படுகிறது, இதன் மொத்த கொள்ளளவு நாளொன்றுக்கு 2,49,000 லிட்டர் ஆகும்.
10 கால்நடை மருத்துவர் குழுவும் வாரத்திற்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்கள் சங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் அவசர கால சிகிச்சை தருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 279 கிராம அளவிலான தொழிலாளர்களால் செயற்கை முறை கருவூட்டல் கள் உற்பத்தியாளர்களின்; வீட்டுகளுக்கு சென்று; மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கால்நடை களின் சுகாதார மேலாண்மை, சுத்தமான பால் உற்பத்தி, மடிநோய் கட்டுப்பாடு மற்றும் தீவனம் குறித்த விழிப்புனர்வு விரிவாக்க அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைகளுக்கு ஒரு வருடத்தில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படுகிறது.
பால் தற்போது தரப்படுத்தப்பட்ட பால், முழு கிரீம் பால், வெண்ணெய், நெய், ஸ்கிம் மில்க் பவுடர், கோவா, தயிர்,மோர், சுவையூட்டப்பட்ட பால், பாதாம் மிக்ஸ், குலாப்ஜாமுன் கலவை மற்றும் குல்பி ஆகியவற்றை உற்பத்தி செய்படுகிறது.;
ஈரோடு ஒன்றியம் மொத்த விற்பனையளர்கள், முகவர்கள்ஃ சில்லறை விற்பனையாளர்கள், பார்லர்கள், ஹைடெக் பார்லர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
ஈரோடு ஒன்றியத்தில், மாநிலத்தின் முதல் கால்நடைத் தீவன உற்பத்தி ஆலை உள்ளது, ஒரு நாளைக்கு 150 மெட்ரிக் டன் கால்நடைத் தீவன உற்பத்தித் நிலையமும்;, நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் கனிமக் கலவை உற்பத்தி நிலையமும் உள்ளது.