ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
திருச்சிராப்பள்ளி ஒன்றியம்:
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 26.09.1980ல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகதிருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி கூட்டுறவு ஒன்றியத்தில் 620 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 535420 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 59203 பால் ஊற்றும் உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் தினசரி 124202 லிட்டர் பால் உள்ளூர் விற்பனையாக செய்யப்பட்டு வருகிறது.
இவ்வொன்றியத்தில் உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் (50+45) 95 பால் வழி தடவாகனங்கள் மூலம் திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் பகுதிகளில் உள்ள 41 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களில் சேகரிக்கப்பட்டு குளிர்விப்பு செய்து திருச்சி மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பால் அனுப்பப்படுகிறது. திருச்சி ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் திருச்சி மத்திய பால்பண்ணை, மணப்பாறை, பெரம்பலூர், பாடாலூர் மற்றும் பால் குளிரூட்டும் நிலையம் நாளொன்றுக்கு 588000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்டதாகும். இங்கு நாளொன்றுக்கு சராசரியாக 503479 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு கையாளப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் திருச்சி மாவட்டத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 124202 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறதுரம் மாதமொன்றுக்கு 242.42 லட்சம் ரூபாய் மதிப்பிலான நெய், கோவா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர் போன்ற பால் உபபொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தின் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு கால்நடை தீவனம் மற்றும் தாதுஉப்புக் கலவை வழங்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டநிதி உதவியின் கீழ் 8 கால்நடை மருத்துவர்கள் மூலம் சுமார் 10379 கால்நடைகளுக்கு பால் உற்பத்தி செய்யும் உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு LIS -TNLDA திட்டத்தின் மூலம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வருகிறது. தீவன வங்கி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3300 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு பசுந்தீவனம் பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.