சிவகங்கை ஒன்றியம்

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 01.01.1983 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை விவகார  எல்லையாக கொண்டு  உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. ஒன்றியம் சார்ந்த சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படும்  சுமார் 506 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 76562 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  11412 உறுப்பினர்கள் பால் வழங்கி வருகின்றனர். உறுப்பினர்கள் வழங்கும் பாலானது சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 34 பால் சேகர வழித்தடங்களின் மூலம் பால் சேகரம் செய்யப்படுகிறது.

ஒன்றியத்தில் நாளொன்றுக்கு காரைக்குடியில் 50,000 லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால்பண்ணை ஒன்றும்,  சிவகங்கையில் நாளொன்றுக்கு  10 ஆயிரம் லிட்டர் திறன் கொண்ட 1 பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்  மாவட்டத்தில் நாளொன்றுக்கு 56,000 லிட்டர் திறன் கொண்ட 13 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 63715 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது,  மீதமுள்ள உபரிப்பால் உருமாற்றத்திற்க்காக ஈரோடுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒன்றியம் தற்போது மாதம் ஒன்றுக்கு சராசரியாக  ரூ.67.71  இலட்சத்திற்கு பால் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் விற்பனை செய்து வருகிறது.ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக 17 எண்ணிக்கை பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு பால் உற்பத்தி மற்றும் தரத்தினை மேம்படுத்திட  கால்நடை தீவனத்திற்கு கிலோ ஒன்றுக்கு          ரூ. 3.20/- வீதமும் 01.04.2021 முதல் ரூ.2.00/-வீதமும் ஒன்றிய நிதியிலிருந்து மானியமாக வழங்கப்பட்டு வந்தது  தற்போது 01.07.2021 முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது .  தாது உப்பு கலவை கிலோ ஒன்றுக்கு ரூ. 20/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.