வேலூர் ஒன்றியம்

வேலூர் பால் பண்ணை 1.10.1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒன்றியம் வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மூன்று ஒருங்கிணைந்த மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு சுமார் 276 சங்கங்களிலிருந்து 16,567  பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1 இலட்சத்து 45 ஆயிரம்  லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒன்றியத்தில் நாளொன்றுக்கு முறையே 1 இலட்சத்து 50 ஆயிரம் லிட்டர்  திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால் பண்ணை வேலூர்,  கொடைக்கல் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால்  கையாளப்படுகிறது. மேலும் 26 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள்  மூலம் (5000 லிட்டர் கொள்ளளவு கொண்டது 20 எண்ணிக்கையும்,  3000 லிட்டர் கொள்ளளவு கொண்டது    3 ம், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்டது 2 ம், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்டது 6 ம், மற்றும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஐந்தும்)    கையாளப்படுகிறது. மேலும் மொத்த கொள்ளளவு 1,21,500 லிட்டர் ஆகும்.

ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 8 பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள்  இயக்கப்படுகிறது. ஒன்றியத்தில்  தற்போது 2 அதி நவீன பாலகங்கள் செயல்பட்டு  வருகிறது.  பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மொத்தம் 52ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு  வருகிறது.. தேசிய வேளாண் அபிவிருத்தி ( NADP) திட்டத்தின் கீழ் கால்நடை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் 5 கால்நடை வழித்தடங்கள் மற்றும் ஒன்றியத்தின் மூலம்  1 கால்நடை மருத்துவ வழித்தடங்களும்  செயல்பட்டு வருகின்றன. மேலும் 2019-2020 ஆண்டில் 5631 கறவை மாடுகளுக்கு 50… மானியத்துடன் கூடிய கால்நடை காப்பீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.  மாதம் ஒன்றுக்கு 5000 செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வொன்றியத்தில் 82 செயற்கை முறை கரூவூட்டல்  நிலையங்கள்உள்ளன. 2017-2018  ஆம் ஆண்டில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 359 லட்சம் மதிப்பீட்டில் 83 லட்சத்தில் கட்டிட பணிகளும், 276 லட்சத்தில் இயந்திர தளவாட சாமான்களும்,  100 % மான்யத்தில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. 

National Project for Dairy Development (NPDD) 2017 – 2018 & 2018 – 2019  திட்டங்களின் கீழ் 500 லிட்டர் கொள்ளளவுகொண்ட 5 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும், 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 தொகுப்பு பால் குளிர்விப்பு  மையங்களும், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட2 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும், 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும், 50% மான்யத்தில் கொள்முதல் செய்து  நிறுவப்பட்டுள்ளது.  மேலும் தானியங்கி பால் பகுப்பாய்வு கருவி 30 எண்ணிக்கையில் அலகு ஒன்றுக்கு 1.5 லட்சம் வீதமும் emat testing equipments 5 எண்ணிக்கையும் அலகு ஒன்றுக்கு 2 லட்சம் வீதமும்  100 % மான்யத்தில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டுள்ளது.  NADP 20-21 திட்டத்தின் கீழ் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் 50 % மான்யத்தில் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

VBMPS  கிராம அளவில் பால் கொள்முதல் திட்டம் I, II, & III திட்டங்களின் கீழ் முறையே 4, 4 மற்றும் 4 ஆக மொத்தம் 12 எண்ணிக்கையில் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள்அலகு  ஒன்று 15 லட்சம்  மதிபீட்டில்  50% மான்யத்தில்   கொள்முதல்  செய்து நிறுவப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 25 எண்ணிக்கையில் தானியங்கி பால் பகுப்பாய்வு கருவி அலகுஒன்று 1.5 லட்சம் மதிபீட்டில் 50% மான்யத்தில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டுள்ளது. மேலும்  இத்திட்டத்தின் கீழ் 13 எண்ணிக்கையில் DPMCU பால் பகுப்பாய்வு கருவி 50% மான்யத்தில் கொள்முதல் செய்து  நிறுவப்பட்டுள்ளது. மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு  2017-2018 திட்டத்தின் கீழ் 3 பால் பகுப்பாய்வு கருவிகள்அலகு ஒன்று ரூ.70,000 வீதம் கொள்முதல் செய்து சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2019-2020ன் கீழ் 30 எண்ணிக்கையில் புல் நறுக்கும் கருவிகள் 75% மான்யத்தில் கொள்முதல் செய்து வழங்கப்பட உள்ளது. தற்போது ஒன்றியத்தில் உபரி பால் 157 மெட்ரிக் டன் பால் பவுடராக உருமாற்றம் செய்த வகையில் சேமிப்பில் உள்ளது. மேலும் வெண்ணெய் 2.8 டன் ஒன்றிய கணக்கில் கையிருப்பில் உள்ளது. பணியாளர்கள் நலன் கருதி ஏப்ரல் 2021 மாதத்திய 277 பணியாளர்களுக்கு கருணை     ஓய்வூதியம் மற்றும்   குடும்ப    ஊதியமாக   மாதம்   ஒன்றுக்கு ரூ.8 இலட்சத்து 47ஆயிரத்து  569 வழங்கப்படுகிறது. ஒன்றியத்திலிருந்து ஓய்வு பெற்ற 207 பணியாளர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் 123 பணியாளர்களுக்கும் நாளொன்றுக்கு½ லிட்டர் பால் இலவசமாக  வழங்கப்பட்டு வருகிறது.