ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
திருவண்ணாமலை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
தமிழக அரசாணை (2டி)எண்.19 கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்(பா.உ.2)துறை நாள்:22.8.2019-ன்படி வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தனித்தனியாக பிரிக்கப்பட்டு 28.08.2019 முதல் செயல்பட்டு வருகிறது.
பால் கொள்முதல் பிரிவு:
இவ்வொன்றியத்தில் திருவண்ணாமலை, செங்கம், ஆரணி மற்றும் அனக்காவூர் பால் சேகரிப்பு குழுவிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள 554 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து நாளொன்றுக்கு அதிகபட்சமாக 3,10,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு 2,56,000 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தில் உள்ள சங்கங்களில் 1,74,167 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் தற்சமயம் 40,248 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு பால் வழங்கி வருகின்றனர்.
கால்நடை மருத்துவம்:
பால் உற்பத்தியாளர்களுடைய கறவை மாடுகளுக்கு வருடம் முழுவதும் செயற்கைமுறை கருவூட்டல் செய்வதற்காக 158 எண்ணிக்கையில் செயற்கைமுறை கருவூட்டல் நிலையங்கள் இவ்வொன்றியத்தில் செயல்பட்டு வருகின்றன. மாதம் ஒன்றிற்கு 11210 எண்ணிக்கையில் செயற்கைமுறை கருவூட்டல் செய்வதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 4027 கறவை மாடுகள் கன்று ஈன்றுகின்றன. இதனால் ஒன்றியத்தின் பால் கொள்முதல் நிலையாக இருக்க உதவி புரிகிறது.
2 ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் தேசிய அபிவிருத்தி வேளாண்மை திட்ட நிதியிலிருந்து 8 கால்நடை மருத்துவர்கள் மூலம் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 3545 எண்ணிக்கையில் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பசுசஞ்சிவினி திட்ட மூலம் 98,276 கறவை மாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபா திட்டத்தில் (BovineTraceability) 2010 எண்ணிக்கையில் செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்பட்டுள்ளது. VET MOBILE APP மூலம் 2,910 கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளித்தது On line மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பிரிவு:
வ. எண் | பால் குளிரூட்டும் நிலையத்தின் பெயர் | கையாளுகின்ற பால் கொள்ளளவு |
1 | திருவண்ணாமலை | 90,000 லிட்டர், |
2 | அனக்காவூர் | 50,000 லிட்டர், |
3 | தொகுப்பு குளிர்விப்பு மையங்கள் (45 எண்ணிக்கை) | 1,97,000 லிட்டர் |
அலுவலக நிர்வாகம்:
திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக அலுவலகம், வேங்கிக்கால் பால் குளிரூட்டும் நிலையத்தில் இயங்கி வருகிறது.