திண்டுக்கல் ஒன்றியம்

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டபிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு 01.04.1988 முதல் செயல்பட்டு வருகின்றது. இவ்வொன்றியம் மதுரை, திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை விவகார எல்லையாகக்  கொண்டு, 192 கிராம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் 88659 லிட்டர் அளவில் நாள்ளொன்றிற்கு பால் கொள்முதல் செய்துவருகின்றது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா;கள் ஒன்றியத்தில் சுமார் 35128  சங்க உறுப்பினா;களில் 5071 சங்க உறுப்பினா;கள் ஆதிதிராவிடா மற்றும் பழங்குடியினத்தினரையும், சுமார் 30057 சங்க உறுப்பினர்கள் பிற்படுத்தபட்டவர்களையும் கொண்டு செயல்பட்டு வருகின்றது. சங்க  உறுப்பினர் ஒன்றியத்திற்கு வழங்கும் பாலிற்கு ஒரு கிலோ திடச்சத்துள்ள பாலின் அளவிற்கு சுமார் ரூ.256/- (சராசரியாக ரூ. 30.96 ஒரு லிட்டர்க்கு) கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கீழ்  மொத்தம் 10 பால் குளிர்விப்பு நிலையங்கள் செயல்பட்டுவருகின்றது. திண்டுக்கல் பால் பண்ணையில் சுமார் நாளொன்றிற்கு சுமார் 30000 லிட்டா; கொள்ளவு கையாளும் திறன் உடையது.  கூட்டுறவு பால் சங்கங்களிக் மூலம்  நாளொன்றிற்கு திண்டுக்கல் பால் பண்ணையில் சுமார் 88659 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பழநி பால்குளிருட்டும் நிலையமானது 20000 லிட்டர் பால் கொள்ளவு கையாளும் திறனுடன் திண்டுக்கல் ஒன்றியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது.

தற்போது திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா;கள் ஒன்றியமானது நாளொன்றிற்கு சுமார் 23000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகின்றது. மீதமுள்ள உபரி பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளார்கள் இணையம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது போக மீதமுள்ள பால், பால் பவுடா;, பால் கோவா, பன்னீர் மற்றும் நெய்யாக உருமாற்றம் செய்யப்படுகின்றது. அவ்வாறு உருமாற்றம் செய்யப்படும் பால் மற்றும் பால் உபபொருட்கள் 59 ஆவின் பாலகங்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு சுமார் ஒரு கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.