கோயம்புத்தூர் ஒன்றியம்:

கோயம்புத்தூர் பால்பண்ணை 1979 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் ஒன்றியம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டு செயல்பட்டு வந்தது. தற்போது கடந்த 17.12.2018 முதல் திருப்பூர் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு  தனி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது. கோவை ஒன்றியம் தற்போது சுமார் 350 சங்கங்களிலிருந்து 9736 பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 1.83 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 5 இலட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தப்படும் பால்பண்ணை பச்சாபாளையம் மற்றும் ஷண்முகாபுரம், சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு தல 50000, 50000, 20000 லிட்டர் திறன் கொண்ட 2 பால் குளிர் நிலையங்கள் மற்றும் நாளொன்றுக்கு 5000 லிட்டர் திறன் கொண்ட தொகுப்பு பாலகுளிர்விப்பான் மையங்களும் 10000 லிட்டர் திறன் கொண்ட 5 தொகுப்பு பாலகுளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 1,71,000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறதுஒன்றியத்தில் தயாரிக்கபடும் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, மைசூர்பா, பாதாம் பவுடர், தயிர், நறுமண பால் பாட்டில், வெண்ணெய், காஜுகட்லீ, மோர் மற்றும் லஸ்ஸி.