ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
கடலூர் ஒன்றியம்:
கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 26.08.2019 அன்று முதல் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் கடலூர் மாவட்டம் செயல்தொட்டு வருகின்றது.ஒன்றியம் கடலூர் மாவட்டம் முழுவதும் விவகார எல்லையாக கொண்டு சுமார் 179 சங்கங்களிலிருந்து 7012 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 51,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 39000 லிட்டர் திறன் கொண்ட 07 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகிறன்றன. ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 18 பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது.ஒன்றியத்தில் தற்போது 1 பாலகம் செயல்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டுகளில் 10 அதி நவீன பாலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மொத்தம் 158 பாலகங்கள் அமைக்கைப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் 150 டன் கால்நடை தீவனம் ஆவின் நிறுவனம் மூலம் வழங்கபட்டு வருகிறது. கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ. 3.20 மானியமாக ரூ. 4.80 இலட்சம் மாதந்தோறும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.தேசிய கால்நடை இயக்கம் (2019-20) கீழ் புல் நறுக்கும் கருவிகள் 15 எண்ணிக்கை 75% மானியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் 2019-20 ஆண்டில் கறவை மாடுகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்றியத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் பணபட்டுவாடா 10 தினங்களுக்கு ஒருமுறை நிலுவையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட பணிநிலைத்திறன் 60 எண்ணிக்கையில் 11 (26.08.2021-ன்படி) பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வருகிறன்றனர்.மாநில தீவன அபிவிருத்தி திட்டம் (2019-20) கீழ் 25 ஏக்கரில் கோ-24 தஹீவீனப்பயிர் 22 பணியாளர்கள் மூலம் பயிரிடப்பட்டு சங்கங்களின் மூலம் உற்பத்தியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர்/பால் வளத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் விபரங்கள்:
தேசிய பால்பண்ணை மேம்பட்டு திட்டம் (2018-19) கீழ் 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட 02 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் நிறுவப்பட்டு வருகிறது. 3000 லிட்டர் கொள்ளவு கொண்ட 03 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் நிறுவப்பட்டு வருகிறது. தேசிய வெள்ளம் அபிவிருத்தி திட்டத்தின் (2020-21) கீழ் இல்லத்திற்கு சென்று காலண்டை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் 04 அலகுகள் செயல்பட்டு வருகின்றன.10 எண்ணிக்கையில் கியோஸ்க் பாலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.
தீவினை வாங்கி திட்டம் (2020-21) - திட்ட இலக்கு 300 ஏக்கர். இதில் 300 ஏக்கரில் 300 பணியாளர்களுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எதிர்கால திட்டங்கள்:
ஒன்றியத்தின் பால் விற்பனை நாளொன்றுக்கு 28000 லிட்டரிலிருந்து 35000 லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.பாலின் காப்பு நேரம் அதிகரிக்கவும், போக்குவரத்துக்கு கட்டணத்தை குறைக்கவும் தேசிய பால்பண்ணை மேம்பட்டு திட்டம் (2018-19) கீழ் 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட 04 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் அமைக்க பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றியத்தில் நுகர்வோர்களுக்கு தேவையான வெண்ணெய் 100 கி, 200 கி மற்றும் 500 கி அளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.