ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
கரூர் ஒன்றியம்
கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 26.08.2019 இல் பதிவு செய்யப்பட்டு 28.08.2019 முதல் துவங்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்தின் கீழ் கரூர் மாவட்டம் முழுவதும் எல்லையாக கொண்டு உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 160 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80400 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5890 பால் ஊற்றும் உறுப்பினர்கள் பயனடைந்து வருகிறன்றனர்.
கரூர் மாவட்டத்தில் உறுப்பினர்களிடம் இருந்து 23 பால் வழித்தடங்கள் மூலம் கரூர் பால் குளிரூட்டும் நிலையம் (நாள் ஒன்றுக்கு 50000 லிட்டர் கையாளும் திறன்) மற்றும் நான்கு 5000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட தரகம்பட்டி, தாளியம்பட்டி, சின்னாண்டிபட்டி மற்றும் வேலாயுதம்பாளையம் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் பால் உப பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ள உற்பத்தியாளர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை பால்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
மாதந்தோறும் சராசரியாக 250 டன் கால்நடை தீவனம் அமூல் (குஜராத் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனம்) மற்றும் ஈரோடு ஒன்றியத்திடம் இருந்து கொள்முதல் செய்யத்து பள்ள உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தாது உப்பு கலவை திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மாதந்தோறும் 3 டன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் தேசிய வவேளான் அபிவிருத்தி திட்ட நிதியுதவியின் கீழ் 3 கால்நடை மருத்துவர்கள் மூலம் அணைத்து சங்கங்களுக்கும் வாரம் ஒருமுறை மருத்துவ வசதி மற்றும் தினசரி அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் நலன் பேணப்பட்டு வருகிறது. தீவன வாங்கித்திட்டத்தின் கீழ் 750 ஏக்கர் பயிர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 7687 விவசாயிகளுக்கு கிஷன் கடன் எடுக்கப்பட்டு, இன்று வரை 6677 உறுப்பினர்களின் விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பால் பண்ணை நிர்வாக கட்டிட கட்டுமானம் சுமார் 2.10 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்க நடவடிக்கை