புதுக்கோட்டை ஒன்றியம் 

புதுக்கோட்டை மாவட்டம் 1974 ஜனவரி மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவு+ர் மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஆற்றுபாசனம் இல்லாதகாரணத்தால், பருவமழையை நம்பியே உள்ளது. பருவமழை பொய்க்கும்பொழுது புன்செய் விவசாயம் பாதிக்கப்படும் மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் பெரும்பாலும், செம்மண், களிமன் மற்றும் கடற்கரை மாவட்டமாக உள்ளதால் மணல் நிறைந்த பகுதியாகும், எனவே நான்கில் ஒருபகுதி உப்புத்தன்மை ஃகாரத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பணியாக திகழ்கிறது.

ஆவின் மூலம் 342 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்அமைக்கப்பட்டு 11512 விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாலை கொள்முதல் செய்துகொள்வதால் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு ஊக்குவிக்கப்படுகிறது.

எதிர்கால திட்டங்கள்:-

விவசாய பயிர் உற்பத்தியால் நிலத்தின் தேவை அதிகரிப்பதால் கால்நடைகளுக்கான பச்சை தீவனம் பற்றாக்குறை உள்ளது. எனவே அதிகரித்துவரும் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவன தேவையினை பூர்த்தி செய்ய மாற்று மேய்ச்சல் வளங்களை ஈடுசெய்ய ஹைட்ரோபோனிக்ஸ், அசோலா மேம்பட்ட தீவனம், மாற்று தீவனத்தை அனுக வழிவகை செய்கிறது. இதன் மூலம் தரமான பால் உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தியாளர்களின் நலன் மேம்படும்.

விவசாயிகளுக்கு எங்களின் பங்களிப்பு:

கால்நடைகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவித்தல், உறுப்பினர்களுக்கு சொந்தமான கால்நடைகளுக்கு தேவையான செயற்கைமுறை கருவு+ட்டல், மருத்துவ வசதிகள் மற்றும் அவசரகால மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை செய்துகொடுப்பது.

தூய்மையான பால் உற்பத்தி, தரமான பாலின் முக்கியத்துவம், கால்நடைகளுக்கு தாதுஉப்புக்கலவை வழங்குவது, புற ஒட்டுண்ணி கட்டுப்பாடு, கோடைகால கால்நடை பராமரிப்பு, தீவன சேமிப்பு ஃ பராமரிப்பு மற்றும் அறிவியல் சார்ந்த கால்நடை பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

கால்நடை மருத்துவர்கள் மூலம் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு, தீவிர சிகிச்சை, நோய் தடுப்பு ஆய்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது.

எங்களின் தற்போதைய பணிகள்:

உள்கட்டமைப்பு, ஆலை மற்றும் இயந்திரப்பணிகளின் விரிவாக்கம்

புதிய அதிநவீன பாலகங்கள், ர்வு சேவை மற்றும் ஊஐP அமைப்பு

புதிய 5000 லிட்டர் கொள்ளவு கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையங்கள்.

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 சங்கங்களுக்கு தானியங்கி பால் கொள்முதல் இயந்திரங்கள் வழங்குவது.

ஒவ்வொரு பால் கொள்முதல் நிலையங்களிலும் பாலின் கலப்படம் இல்லாததை உறுதி செய்ய தேவையான கருவிகள் வழங்குவது.