ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
GENERAL PROFILE OF NEWLY CREATED THIRUPATHUR MILK UNION - AAVIN
- Thirupathur District Co.operative Milk Producers Union Ltd.was established on 13.06.2022.
- Thirupathur Milk Union includes 04 No. of constituency namely 1)Thirupathur 2)Jolarpettai 3)Vaniyambadi and 4)Ambur, and 06 Blocks Namely 1)Thirupathur 2)Natrampalli 3)Kandhili 4)Jolarpettai 5)Madhanur & 6)Alangayam and 04 Taluks Namely 1)Thirupathur 2)Natrampampalli 3) Ambur and 4)Vaniyambadi.
- Thirupathur Milk Union consists of 195 Revenue Villages and 208 Village Panchayats.
- Thirupathur Milk Union has 40 Milk Producers Co-operative Societies and 18308 Registered Co-operative Members. And active pouring milk producers are 2262. From them daily an averge of 25500 Lts of milk is being procured.
- This union has 07 nos. of Bulk Milk Cooling Centres and its handling capacity is 33500 Lts. of milk Per day.
- An average of 25500 Lts. of milk is being procured by this.
- At present Thirupathur Milk Union is selling 4900 Lts. of sachet milk per day. as local sales, and 14000 Lts. of milk per day is being sent to Krishnagiri Dairy and 11500 lts. of milk sent to Vellore Dairy.
- Thirupathur Milk Union at present is selling milk and milk products to the worth of Rs.81.00 lakhs per month.
- At present 02 milk distribution routes are being operated.
- Thirupathur Milk union has 42 milk agents, 30 FROs, 18 aavin parllours, 02 whole sale dealers for products.
- In Thirupathur Milk union at present 01 high tech parlour is functioning near by Ambur Town.
- Through 40 MPCS in this milk union, Rs.1.00 lakh worth of milk products being sold every month.
- Under NADP Scheme 01 mobile veterinary route is being operated.
- Yearly - every month 800 artificial inseminations are being carried out through 14 VLW centres and 01 mobile veterinary route. This year 667 cows are being insured through 50% subsidy scheme.
- Totally 11 nos. of Automatic Milk Collection units (AMCU), 09 nos. of DPMCU and 02 nos. of EMAT are in used.
- The union milk payment to the producers is done up to 07.07.2022. From 08.07.2022 to 31.07.2022 approximately Rs 1.83 crores only pending as on date.
General Manager. Vellore Union.
புதியதாக துவக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்
- திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 13.06.2022 அன்று துவக்கப்பட்டது.
- புதியதாக துவக்கப்பட்ட இவ்வொன்றியம் 1)திருப்பத்தூர் 2)ஜோலார்பேட்டை 3)வாணியம்பாடி மற்றும் 4) ஆம்பூர் 04 சட்டமன்ற தொகுதிகளையும் 1)திருப்பத்தூர் 2)நாட்றம்பள்ளி 3)கந்திலி 4)ஜோலார்பேட்டை 5) மாதனூர் மற்றும் 6) ஆலங்காயம் 06 ஒன்றியங்களையும் 1) திருப்பத்தூர் 2) நாட்றம்பள்ளி 3) ஆம்பூர் மற்றும் 4) வாணியம்பாடி 04 தாலுக்காக்களையும் உள்ளடக்கியதாகும்.
- இவ்வொன்றியத்தில் 195 வருவாய் கிராமங்கள் மற்றும் 208 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.
- இவ்வொன்றியத்தில் 40 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 18308 பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நாளது தேதயில் 2262 பால் உற்பத்தியாளர்கள் பால் ஊற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 25500 லிட்டர் பால் சங்க அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் 5000 லிட்டர் கொள்ளளவுக்கொண்ட 05 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும், 3000 லிட்டர் கொள்ளளவுக்கொண்ட 02 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும் இயங்கி வருகின்றன. மொத்தம் 07 தொகுப்பு பால்குளிர்விப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக 1000 லிட்டர் கொள்ளளவுக்கொண்ட 02 தொகுப்பு பால் குளிர்விப்பு பால் கலன்களும், 500 லிட்டர் கொள்ளளவுக்கொண்ட 01 தொகுப்பு பால் குளிர்விப்பு பால் கலனும் பயன்பாட்டில் உள்ளன. (நாளொன்றுக்கு கையாளும் மொத்த கொள்ளளவு திறன் 33500 லிட்டர்).
- இந்த 07 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 25500 லிட்டர் பால் கையாளப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் 25500 லிட்டர் பாலில் 14000 லிட்டர் பால் கிருஷ்ணகிரி பால் பண்ணைக்கும், 11500 லிட்டர் பால் வேலூர் பால் பண்ணைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 4900 லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் மாதம் ஒன்றுக்கு 66.00 லட்சம் மதிப்பில் பாக்கெட் பாலும், 15.00 லட்சம் மதிப்பில் பால் உபபொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் 02 பால் விநியோக வாகனங்கள் இயங்கி வருகின்றன.
- இவ்வொன்றியத்தில் 42 பால் முகவர்களும் 30 தனிஉரிமை கிளைதாரர்களும் 18 ஆவின் பாலகங்களும் 02 பால் உபபொருட்கள் மொத்த விற்பனையாளர்களும் உள்ளனர்.
- தற்பொழுது இவ்வொன்றியத்தில் ஆம்பூர் அருகே 01 நவீன பாலகம் இயங்கி வருகிறது.
- இவ்வொன்றியத்தில் 40 சங்கங்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பில் பால் உபபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
- இவ்வொன்றியத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 01 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடம் இயங்கி வருகிறது.
- இவ்வொன்றியத்தில் 01 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடம் மற்றும் 14 கிராமநல ஊழியர்கள் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 800 செயற்கைமுறை கருவூட்டல்கள் செய்யப்படுகின்றன.
- இவ்வொன்றியத்தில் நடப்பாண்டில் 667 கறவை மாடுகளுக்கு 50% மான்யத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
- இவ்வொன்றியத்தில் 11 AMCU, 09 DPMCU, 01 EMAT பால் அளவீடு மற்றும் பால் பரிசோதனை கருவிகள் பயன்பாட்டில் உள்ளன.
- இவ்வொன்றியத்தில் 07.07.2022 வரை உற்பத்தியாளர்களுக்கு பால் பணம் வழங்கப்பட்டுள்ளது. 08.07.2022 முதல் 31.07.2022 வரை ரூ.1.83 கோடி நிலுவை பால் பணம் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. நன்றி
பொது மேலாளர்
வேலூர் ஒன்றியம்
Union Site Link: Thirupathur Union