நீலகிரி ஓன்றியம்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது தற்சமயம் 93 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 13000 லிட்டர் பால் பெறப்படுவதுடன் கோவை மாவட்ட ஒன்றியத்தில் இருந்து கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டு இம்மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 16500 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது பால் உபபொருட்களான வெண்ணெய் நெய் பால்கொவா பாலாடைக்கட்டி பன்னீர் சுவையூட்டியபால் ஐஸ்கிரீம் பாதம் பவுடர் ஆகியவை மாதமொன்றுக்கு ரூ.57.00 இலட்சம் உள்ளுர் விற்பனையையும் அத்துடன் வெண்ணெய் சென்னை மெட்ரோ விற்பனை சுமார் ரூ.60.00 இலட்சம் முதல் 110.00 இலட்சங்கள் மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் நாள் ஒன்றுக்கு 2000 லிட்டர் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் வெண்ணெய் சுமார் 1.50 மெட்ரிக் டன் ஆகியவை இராணுவமையம் வெலிங்டன் நீலகிரி காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது  

ஓன்றியத்தில் நிறைவேற்றப்பட்ட அரசு

நலத்திட்டங்கள்நீலகிரி மாவட்டத்திற்கு 2017 – 2018 ஆம் ஆண்டில் சிறப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 7.20 இலட்சங்கள் நிதி உதவியும் 2018 - 2019 ஆண்டில் ரூபாய் 26.80 இலட்சங்கள் நிதி உதவியும்; 2019 – 2020 ஆண்டில் ரூபாய் 54.00 இலட்சங்கள் நிதி உதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் அனைத்து பகுதி பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம் தாது உப்புக்கள் ஓட்ஸ் விதைகள் துருவுறாபால்கேன்கள் மற்றும் பால் கறவை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை சிகிச்சை பணி மாவட்டம் தோறும் மேற்க்கொள்ள ஒன்றியத்தில் கால்நடை மருத்துவர்கள் இருவர் நியமிக்கப்பட்டு இவர்களுக்கு சம்பளத்தொகையாக முறையே 2017 – 2018 ஆண்டுகளில் ரூபாய் 828000.00 மேலும் 2018 - 2019 ஆண்டுகளில் ரூபாய் 828000.00 2019 – 2020 ஆண்டுகளில் ரூபாய் 828000.00 செலவிடப்பட்டுள்ளது. மேலும் இத் திட்டத்தின் கீழ் நவீன பாலகங்கள் புதிதாக கட்டப்பட்டும் மற்றும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் தேசிய செயற்கை கருவூட்டல் திட்டத்தின்படி 2019 - 2020 ஆண்டுகளில் பேஸ்-1 -யில் 746 செயற்கைமுறை கருவூட்டல் மேலும் 2020 – 2021 ஆண்டுகளில் பேஸ்-2 -யில் 1140 இலவசமாக செயற்கைமுறை கருவூட்டல் சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு செய்யப்பட்டுள்ளது.