திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இவ்வொன்றியம் 169 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தரப்பரிசோதனை செய்து  வருகிறது. மேலும் சங்கரன்கோவில்,வள்ளியூர் பால் குளிரூட்டும் நிலையங்கள் மற்றும் பன்னீரூத்து, பிள்ளையர்குளம் மொத்த பால் குளிர்விப்பான் மூலம் சங்கங்களிடமிருந்து பெறப்படும் பாலை தரப்பரிசோதனை செய்து குளிர் செய்யப்பட்டு மத்திய பண்ணைக்கு கொண்டு வரப்படுகிறது.

மத்திய பால் பண்ணையில் தரப்பரிசோதனைகளுக்கு பின்னர் பதப்படுத்தப்பட்டு; சமன்படுத்தி பால், (கொழுப்பு சத்து 3.0மூ இதரச்சத்து 8.5மூ) நிலைப்படுத்திய பால் (கொழுப்பு சத்து 4.5மூ இதரச்சத்து 8.5மூ) மற்றும் நிறை கொழுப்பு பால் (கொழுப்பு 6.0மூ இதரச்சத்து 9.0மூ) என மூன்று வகையான பால் சுத்தமான, சுகாதாரமான முறையில்; தயாரிக்கப்பட்டு 160 மிலி, 250 மிலி, 500 மிலி மற்றும் 1 லிட்டர் பால் பாக்கட்களில் அடைக்கப்பட்டு அரசு நிர்ணயித்த விலையில் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த நுகர்வோர்களுக்கு 250 முகவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 39000 லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இவ்வொன்றியத்தில் ஒரு அதிநவீன பாலகம் ஒன்று மற்றும் 25 பாலகங்களும் செயல்பட்டு வருகிறது. உபரி பால் மதுரை மற்றும் ஈரோடு ஒன்றியத்திற்கு உருமாற்றத்திற்கு அனுப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட ஒன்றியத்திலிருந்து 10000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பால் பாக்கட்டுகளாக அனுப்பி வைக்கப்படுகிறது.   

   இவ்வொன்றியத்தில் தயாரிக்கப்படும் பால் உபபொருட்களான பால்கோவா, மில்க் கேக், மைசூர்பா, நெய், தயிர், மோர், உலர்விதை பவுடர், நெய் அல்வா மற்றும் இணையத்தின் மூலம் ;பெறப்பட்ட ஐஸ் கிரீம் மற்றும் பால் உபபொருட்கள் ஒ‹¿ய முகவ®இ பாலக§கë‹ மூல« மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.1 கோடி லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.;

   மேற்கண்ட பணிகள் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள ஒன்றியத்தில் 144 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் இவ்வொன்றியத்தில்; பால்பணம் சராசரியாக 1.40 கோடி        10 நாட்களுக்கு ஒரு முறை சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

     மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் கால்நடை தீவனம், தாது உப்புக்கள் மற்றும் இலவச கால்நடை மருத்துவ வசதி, கால்நடை காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இப் பணிகளை மேற்கொள்ள தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் (NயுனுP) 50மூ பங்களிப்புடன்   5 கால்நடை மருத்துவர்கள் கொண்டு நடமாடும் கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒன்றியத்தின் மூலம் வருடத்திற்கு 2000 ஆவு கால்நடை தீவனம் சுமார் 64 இலட்சம் மானியத்துடன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பணியாளர்களுக்கு கால்நடை வளர்ப்பு, தீவன பயிர் மேலாண்மை, தூய முறை பால் உற்பத்தி, செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி போன்ற பயிற்சி ஒன்றிய பயிற்சி நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.