ஒன்றியங்கள்
Unions
- கோவை ஒன்றியம்
- கடலூர் ஒன்றியம்
- தர்மபுரி ஒன்றியம்
- திண்டுக்கல் ஒன்றியம்
- ஈரோடு ஒன்றியம்
- Kallakurichi Union
- காஞ்சிபுரம் திருவள்ளூர் ஒன்றியம்
- கன்னியாகுமாரி ஒன்றியம்
- கரூர் ஒன்றியம்
- கிருஷ்ணகிரி ஒன்றியம்
- மதுரை ஒன்றியம்
- நாமக்கல் ஒன்றியம்
- நீலகிரி ஒன்றியம்
- புதுக்கோட்டை ஒன்றியம்
- சேலம் ஒன்றியம்
- சிவகங்கை ஒன்றியம்
- தஞ்சாவூர் ஒன்றியம்
- தேனி ஒன்றியம்
- Thirupathur Union
- தூத்துக்குடி ஒன்றியம்
- திருநெல்வேலி ஒன்றியம்
- திருப்பூர் ஒன்றியம்
- திருவண்ணாமலை ஒன்றியம்
- திருச்சி ஒன்றியம்
- வேலூர் ஒன்றியம்
- விழுப்புரம் ஒன்றியம்
- விருதுநகர் ஒன்றியம்
விழுப்புரம் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், விழுப்புரம் 01.09.1982-ல் பதிவு செய்யப்பட்டு 01.08.1983-ல் ஆரம்பிக்கப்பட்டு வியாபார ரீதியாக செயல்பட தொடங்கியது. இவ்வொன்றியம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ghiy கொள்முதல் செய்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள நகரங்களில் விற்பனை செய்வதுடன் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு மாவட்டங்கள் மற்றும் சென்னை khefu மக்களின் அன்றாட தேவைக்காக பால் அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வொன்றியம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கிராமங்களின் பால் உற்பத்தியை KGikahf கொள்முதல் செய்வதால், கால்நடை வளர்ப்போர், சிறு குறு விவசாயிகள், நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் போன்றோர்களுக்கு neuoahf வேலை வாய்ப்பும் bghUshjhu ரீதியாக மேம்பாடு அடைந்திட வழிவகை செய்து வருகிறது.
உறுப்பினர்களும் பங்குத்தொகையும்:
தற்போது விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 535 சங்கங்கள் அங்கத்தினர்களாக சேர்ந்து ரூ. 84,03,000/- பங்கு செலுத்தியுள்ளனர்.
ஒன்றியத்தின் செயல்பாடுகள்:
இவ்வொன்றியம் மூலம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 535 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து தினசரி சுமார் 2,00,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்ட நகரங்களில் தினசரி சுமார் 9,500 லிட்டர் பாலும், சென்னை புறநகர் பகுதியில் தினசரி 13,000 லிட்டர் பாலும், மீதமுள்ள சுமார் 1,60,000 லிட்டர் பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், சென்னைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விழுப்புரம் பால்பண்ணை, சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையம், பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இவையின்றி, பால் நுகர்வோருக்கு மிகவும் jukhd பாலை வழங்கும் நோக்கத்துடன் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெற்று கிராம சங்க அளவில் நிறுவப்பட்டுள்ள பின்வரும் 17 மொத்த பால் குளிரூட்டும் மையங்களின் மூலமாக பால் கொள்முதல் செய்யப்பட்டு neuoahf சென்னை பால் பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தினசரி பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடமிருந்து ghiy கொள்முதல் செய்து விழுப்புரம் பால்பண்ணை, குளிரூட்டும் நிலையம் மற்றும் மொத்த பால் குளிரூட்டும் மையங்கள் ஆகிய இடங்களுக்கு கொண்டு வருவதற்கு VJthf 54 பால் சேகரிப்பு வழித்தடங்கள் செயல்படுகின்றன. விழுப்புரம் பால் பண்ணையிலிருந்து நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் செய்ய VJthf பால் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்ல 11 வழித்தடங்கள் செயல்படுகின்றன. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, NADP திட்ட பங்களிப்பு 50ரூ நிதியுதவியின் கீழ் 11 நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் செயல்படுகின்றன. மேலும், பால் சேகரிப்பு மேற்பார்வை பணிகளுக்காக 5 இலகுரக வாகனமும், பிஎம்சி பணிக்காக 1 இலகுரக வாகனமும், விற்பனை பிரிவிற்கு 1 இலகுரக வாகனமும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், ஒன்றியத்தின் மூலம் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங் களிலுள்ள பால் உற்பத்தி செய்யும் சிறு/குறு விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் கடன் உதவிகளுடன் சில திட்டங்கள் இவ்வொன்றியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒன்றியத்தில் நடைமுறையில் உள்ள திட்டங்கள்
தேசீய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்
புதிய நடமாடும் கால்நடை மருத்துவ வழித்தடங்கள்
மத்திய அரசின் தேசீய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2020-2021-ன் கீழ் 50 சதவிகித மானிய அடிப்படையில் 11 நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான வழித்தடங்கள் இயக்க அனுமதி பெறப்பட்டு ஜிலை 2021 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
கால்நடை தீவனம்:
தற்சமயம் ஒன்றியம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ழுஊஆஆகு, MARKFED மூலம் கலப்பின தீவனம் பெற்று mjid சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் 2021 முதல் ஜிலை 2021 1165 மெ.டன் தீவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தாது உப்புக்கலவை
ரூ.20.00 இலட்சம் மதிப்பில் தாது உப்பு fyit இயந்திரம் நிறுவப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு தாது உப்பு fyit இலாப நோக்கமின்றி குறைந்த விலையில் ஒன்றிய சங்கங்கள் மற்றும் இதர மாவட்ட ஒன்றியங்களான வேலூர், திருவண்ணமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறைக்கு விழுப்புரம் கடலூர் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020-2021-ஆம் ஆண்டில் 755 மெ.டன், நூண் தாது உப்பு fyit இதர மாவட்ட ஒன்றியங்களுக்கும், பால் உற்பத்தியாளர்களுள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கால்நடை பரமரிப்பு துறைக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அண்ணா நலநிதி
அண்ணா நலநிதி திட்டத்தின் மூலம் 33618 உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் சந்தாதாரர் பங்களிப்பு நபர் ஒன்றுக்கு ரூ.1.00 வீதம், சங்கத்தின் இணைப்பங்களிப்பு ரூ.0.50 பைசா, ஒன்றியத்தின் இணைப்பங்களிப்பு ரூ.0.50 igrh விகிதம் ரூ.2/-செலுத்தப்பட்டு வருகிறது.
தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம் (NAIP )
தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம் (NAIP ) திட்டம் மூலம் 165 சங்கங்கள் சேர்க்கப்பட்டு 18500 fwit மாடுகளுக்கு இலவசமாக தேசிய செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டு வருகிறது.
நபார்டு திட்டம் :(NABARD ளுஊழநுஆநு 2018-2019)
விழுப்புரம் பால் பண்ணை, சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நபார்டு திட்டம் 2018-2019ன் கீழ் ரூ.645.45 லட்சம் பெறப்பட்டு பால் பண்ணை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
NADP 2018-19
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2018-19ன் கீழ் ரூ.100 இலட்சம் நிதியுதவியின் கீழ் 9 விதமான பணிகள் முடிக்கப்பட்டு, பால் பண்ணை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
கால்நடை மருத்துவ பணிகள் NADP 2020-21
ஒன்றியத்தில் இணைந்துள்ள சங்கங்களின் உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க NADP திட்டத்தின்கீழ் 11 கால்நடை மருத்துவ வழித்தடங்கள் இயக்கப்படுகிறது. கால்நடை மருத்துவ வழித்தடத்தில் கால்நடை மருத்துவரால் வாரந்தோறும் சங்கங்களுக்குச் சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சங்க அளவில் சங்கப் பணியாளர் xUtiu தேர்வு செய்து கிராம நல ஊழியர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மூலம் சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு சினை ஊசி, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டொன்றுக்கு போடப்படும் சினை ஊசிகள்-1,93,000
மாநில தீவண அபிவிருத்தி திட்டம்
மாநில தீவன அபிவிருத்தி திட்டம் 2019-20ன் படி, விழுப்புரம் மாவட்டத்தில் சின்னசேலம் மற்றும் விழுப்புரம் பகுதியில் 22 பயனாளிகள் 25 ஏக்கரில் கோ-4, கோ-5 தீவனப்புல் பயிரிடப்பட்டு அதன் மூலம் சங்க உறுப்பினர்களுக்கு கிலோ-ரூ.1/- வீதம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீவன வங்கி திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் 110 விதியின் கீழ் நமது மாவட்டத்தில் 1000 ஏக்கரில் கோ-4 தீவனபுல் வளர்ப்பதற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது 481 ஏக்கரில் 602 பயனாளிகள் மூலம் கோ-4 தீவனப்புல் பயிரிடப்பட்டு தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசிய கால் நடை காப்பீடு திட்டம்
இத்திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் 11,048 கால்நடைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்த வகையில், ரூ.41.00 இலட்சம் பயணாளிகளுக்கு மானியமாக செலவிடப்பட்டுள்ளது.
பால் விற்பனை
இவ்வொன்றியத்தின் மூலம் தற்போது சுமார் 10,000 லிட்டர் பாக்கெட் பால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் 13,000 லிட்டர் பால் செங்கல்பட்டு- kiwkiy நகர், தாம்பரம்-காஞ்சிபுரம் பால் வழித்தடங்களில் இணையம் மூலம் விற்பனை செய்து வருகிறோம்.
பால் உப பொருட்கள் விற்பனை
நமது ஒன்றிய விழுப்புரம் பால் பண்ணையில் நுகர்வோர்கட்கு jukhd ஆவின் நெய் , பால் கோவா, ஐஸ்கீரிம் வகைகள், குல்பி, பாதாம் பவுடர் மற்றும் தயிர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் விழுப்புரம் பால்பண்ணையின் பின்புறம் தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன ஆவின் ஜங்சன் மற்றும் பால் பண்ணையின் முகப்பில் ஆவின் பாலகம் துவங்கப்பட்டுள்ளது.
நமது ஒன்றியத்தின் பால் உற்பத்தியாளர்களின் eyid கருத்திற்கொண்டு உரிய திட்டங்களை ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்தும், மத்திய, மாநில அரசுகளின் மூலம் மானியங்களை ஒதுக்கீடு செய்து, பல்வேறு வழிகளில் cWJizahf இருந்து திட்டங்களை நிறைவேற்ற உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர்கட்கும், அரசு செயலர், கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அவர்கட்கும், ஆணையர், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, சென்னை-51 அவர்கட்கும், இணைய பெருந்தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் லிட்., சென்னை-35, துணைபால் ஆணையர், சென்னை-51 அவர்கட்கும் நமது ஒன்றிய தலைவர், உபதலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கட்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ஒன்றிய தணிக்கையை விரைந்து முடித்திட தக்க நடவடிக்கைகள் மேற்கொண்ட தணிக்கைத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர், சென்னை அவர்கட்கும், மண்டல துணை இயக்குநர் (தணிக்கை), திருச்சி மற்றும் உதவி இயக்கநர் (தணிக்கை) விழுப்புரம் அவர்களுக்கும், ஒன்றியம் நன்முறையில் இயங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட துணைப்பதிவாளர் (பால்வளம்), விழுப்புரம் அவர்கட்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.