மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டபிரிவின் கீழ்; பதிவு செய்யப்பட்டு 1967 முதல் செயல்பட்டு வருகின்றது. இவ்வொன்றியம் மதுரை மாவட்டத்தில் 713 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் 239000; லிட்டர் அளவில் நாளொன்றிற்கு பால் கொள்முதல் செய்துவருகின்றது.; இவ் ஒன்றியத்தில் சுமார் 17910  சங்க உறுப்பினர்கள் பால் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இவ் ஒன்றியத்தின் கீழ்  மொத்தம் 60 பால் குளிர்விப்பு நிலையங்கள் செயல்பட்டுவருகின்றது. கூட்டுறவு பால் சங்கங்களின்; மூலம்  நாளொன்றிற்கு சுமார் 130000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. மதுரை  பண்ணையில் சுமார் நாளொன்றிற்கு சுமார் 500000 லிட்டர் கொள்ளவு கையாளும் திறன் உடையது. 

தற்போது இவ்; ஒன்றியமானது நாளொன்றிற்கு சுமார்; 185000 லிட்டர் பால் விற்பனை செய்து வருகின்றது. மீதமுள்ள உபரி பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது போக மீதமுள்ள பால், பால் பவுடர், பால் கோவா, பன்னீர் மற்றும் நெய்யாக உருமாற்றம் செய்யப்படுகின்றது. அவ்வாறு உருமாற்றம் செய்யப்படும் பால் மற்றும் பால் உபபொருட்கள் 45 ஆவின் பாலகங்கள் மற்றும் 388 டெப்போக்கள் மூலமாக மாதம் ஒன்றிற்கு சுமார் 2.65 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த 2020-2021 –ம் ஆண்டு தணிக்கையின் படி மதுரை ஒன்றிய நிகர லாபம் தோராயமாக 303.32 லட்சங்கள் ஆகும்.