போக்குவரத்து பிரிவு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் ஒரு அங்கமாகப் போக்குவரத்துப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இது மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆக மூன்று கிளைகளை கொண்டுள்ளது. இந்த மூன்று கிளைகளும் துணை பொது மேலாளர்(பொறியியல்) அவர்களின் கட்டுப்பட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றது. துணை பொது மேலாளர்(பொறியியல்) இணை நிர்வாக இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறார்.

 இப்பிரிவில் மேலாளர் முதல் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் வரை தற்போது 221 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். போக்குவரத்துப் பிரிவின் முக்கியமான செயல்பாடு, மாவட்ட மற்றும் சங்கங்களிலுள்ள மொத்த பால் குளிர்விப்பான்களில் இருந்து பால் டேங்கர்கள் மூலமாக சென்னை பெரு நகர பால்பண்ணைகளான மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால்பண்ணைகளுக்கு பால் சேகரித்து வருவதாகும்.

மேற்கண்ட பணிகளுக்காக மாதவரம், அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால்பண்ணைகள் மூலம் 53 இணைய பால் டேங்கர் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவை தவிர, மாவட்ட ஒன்றியங்களிலிருந்து பால் சேகரித்து வருவதற்கு தேவைக்கேற்ப டெண்டர் மூலம் சுமார் 200 தனியார் பால் டேங்கர்களை ஒப்பந்தம் செய்து, அவைகளின் மூலமும் சென்னை பெரு நகர பால்பண்ணைகளுக்கு தினந்தோறும் சுமார் 10 லட்சம் முதல் 11 லட்சம் வரை பால் கொண்டு வரப்படுகின்றது.

பால் டேங்கர்கள் விபரம்

(அ) 15000 லிட்டர் கொள்ளளவு பால் டேங்கர்கள்                   -        32 எண்ணிக்கை

(ஆ) 9000 லிட்டர் கொள்ளளவு பால் டேங்கர்கள்                     -        21 எண்ணிக்கை

                                                              மொத்தம்                            -        53 எண்ணிக்கை

மேலும் இப்பிரிவில் பராமரித்து வரும் கண்டெய்னர் வாகனங்கள்(பஃப்)  மூலம் பால் உபபொருட்களான வெண்ணெய், பால் பவுடர் மாதத்திற்கு சராசரியாக 300 டன்கள் சென்னை பெருநகர பால்பண்ணைகளுக்கு மாவட்ட ஒன்றியங்களிலிருந்து எடுத்து வரப்படுகிறது. பால் பொருட்கள் தொழிற்சாலைக்கு தேவையான சர்க்கரை, சர்க்கரை ஆலைகளிலிருந்து மாதத்திற்கு சராசரியாக 27 டன்கள் சேகரம் செய்யப்பட்டு வருகிறது.

கண்டெய்னர் வாகனங்கள்(பஃப்) விபரம்

(அ)  9 டன் கொள்ளளவு கண்டெய்னர்கள்        -          20 எண்ணிக்கை

(ஆ)  7 டன் கொள்ளளவு கண்டெய்னர்கள்        -          3  எண்ணிக்கை

(இ)   லாரி                                                                   -          1   எண்ணிக்கை

                                                                                           --------------       

மொத்தம்                                                                    -        24  எண்ணிக்கை

                                                                                           --------------

மேலும் இப்பிரிவில் பராமரித்து வரும் குளிரூட்டும் கண்டெய்னர் வாகனங்கள் இணைய பால் பொருள் தொழிற்சாலையில் தயாராகும் பால் பொருட்களான ஐஸ்கிரீம், பால் கோவா, மோர் மற்றும் இதர பொருட்கள் சென்னை மாநகர மற்றும் மாவட்ட ஒன்றியங்கள் விநியோகத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குளிரூட்டும் கண்டெய்னர் வாகனங்கள் விபரம்

(அ)     7 டன் கொள்ளளவு குளிரூட்டும் கண்டெய்னர்      -          5  எண்ணிக்கை

(ஆ)    2 டன் கொள்ளளவு குளிரூட்டும் கண்டெய்னர்       -          5  எண்ணிக்கை

(இ)     1 டன் கொள்ளளவு கொண்ட

             நடமாடும் விற்பனை வாகனம்                                 -          3  எண்ணிக்கை

                                                                                                               --------------

                             மொத்தம்                                                          -        13 எண்ணிக்கை

                                                                                                               --------------

இவை தவிர, அனைத்து ஒன்றியங்கள் மற்றும் தலைமை அலுவலகத்திற்கு போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் தொடர்பு பணிகளையும் இப்பிரிவு வழங்கி வருகிறது.