இணைய அலகுகள்
இணை நிர்வாக இயக்குநர் அலுவலகம், அம்பத்தூர்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், என்பது ஒரு கூட்டுறவு நிறுவனம் ஆகும். இது தமிழ்நாடு கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு தேசிய பால் வளர்ச்சி கழகம், ஆனந்த் செயல்பாடுகளுக்கு ஒத்தாக மூன்று அடுக்குமுறையாக தொடக்க கிராம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலம் பால் கொள்முதல், பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தல் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதன்மூலம் கிராம விவசாய சமூகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதே கூட்டமைப்பின் நோக்கம் ஆகும்.
இணையத்தின் முக்கிய மற்றும் பெரிய பிரிவாக இந்த "இணை நிர்வாக இயக்குநர்" பிரிவு கீழ்க்கண்ட பிரிவுகளை உள்ளடக்கி செயல்படுகிறது. அதன் பிரிவுகள் பின்வருமாறு:
1. இணை நிர்வாக இயக்குநர் அலுவலகம், அம்பத்தூர்
2. அம்பத்தூர்/மாதவரம் /சோழிங்கநல்லூர் பால்பண்ணைகள்
3. பால் உப பொருட்கள் பண்ணை, அம்பத்தூர்
4. பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை பிரிவு, நந்தனம்.
5. போக்குவரத்துப் பிரிவு, மாதவரம்
6. தரக்கட்டுப்பாடு பிரிவு
7. பண்டகசாலைப் பிரிவு
8. பால் மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை, திருவண்ணாமலை