எருமையின  உறைவிந்து  நிலையம்

எருமையின உறைவிந்து குச்சிகளை உற்பத்தி செய்து செயற்கை முறை கருவூட்டல் மூலம் எருமையின மரபணு ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் மூலம் நவம்பர் 1983ஆம் ஆண்டு எருமையின உறைவிந்து நிலையம் நிறுவப்பட்டது. இந்த நிலையம் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் உத்தரவின் பெயரில் குறைந்த நிலையான விதிகள் எனப்படும் Minimum Standard Protocol (MSP)  முறைப்படி NJSF, ஊட்டியில் உற்பத்தி செய்யப்பட்ட உறைந்த விந்து குச்சிகள் எருமையின உறைவிந்து நிலையம் மூலமாக அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியதிற்க்கும் மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது.

செயல்பாடுகள்:

  1. நீண்ட கால உறைந்த விந்து சேமிப்பு மற்றும் விநியோக அலகு:

அ. அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களிடமிருந்து பெறப்பட்ட தேவைக்கேற்ப NJ&SF, ஊட்டி பொலிகாளைப் பண்ணையிலிருந்து உறைவிந்து குச்சிகளை பெற்று விநியோகம் செய்வது.

ஆ. கால்நடை மற்றும் எருமையின உறைவிந்து குச்சிகளை கால்நடை வளர்ப்பு பண்ணைகள் மற்றும் இதர அரசு பொலிகாளைப் பண்ணைகளிலிருந்து வாங்குதல் மற்றும் அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களிடமிருந்து பெறப்பட்ட தேவையின் அடிப்படையில் விநியோகம் செய்வது.

இ. பல்வேறு திட்டப்பணிகளான RGM-PTP, DIPA மற்றும் இணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளுக்கு உறைவிந்து குச்சிகளை சேமிப்பது மற்றும் விநியோகம் செய்வது.

ஈ. உறைவிந்து குச்சிகள் பற்றாக்குறை ஏற்படும்போது ஒன்றியங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ECBF ஈச்சங்கோட்டை , DLF ஊட்டி , DLF ஒசூர் மற்றும் போன்ற அரசு பொலிகாளைப் பண்ணைகளிலிருந்தும் SAG, பீடஜ், அலமாதி போன்ற NDDB பொலிகாளைப் பண்ணைகளிலிருந்தும் உறைவிந்து குச்சிகளை வாங்கி விநியோகம் செய்வது.

வருடாந்திர உறைவிந்துகுச்சிகள் விநியோகம்

ஆண்டு

ஒன்றியங்களின் தேவை

ஒன்றியங்களால் எடுக்கப்பட்டவை

எடுக்கப்பட்ட சதவிகிதம் %

2013-14

1635750

1838260

112

2014-15

1626517

1864232

115

2015-16

2247117

1886753

84

2016-17

2405600

1949880

81

2017-18

2407500

1873370

78

2018-19

2393500

1758518

73

2019-20

2255450

1442500

64

2020-21

1890950

1545397

82

 

முன்தனிமைப்படுத்தல் நிலையம், ஆத்தூர்

அ. NDP திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச நிலையான நெறிமுறை அடிப்படையில் முன்தனிமைப்படுத்தல் நிலையம் 60 உயர் மரபணு தகுதிகளை கொண்ட காளைகக்கன்றுகளை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆ. இந்நிலையத்தில் RGM–PTP மற்றும் FPRP மூலமாக கொள்முதல் செய்யப்படும் உயர் மரபணு தகுதிகளைக் கொண்ட காளைக்கன்றுகள் 6 மாத வயது வரை வளர்க்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் நிலையம், ஈரோடு

அ.எருமை உறைந்த விந்து நிலைய வளாகத்திற்கருகே தனிமைப்படுத்தல் நிலையம் 60 உயர் மரபணு தகுதிகளைக் கொண்ட காளைக்கன்றுகளை வளர்க்கும் வகையில் NDP திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஆ.இந்நிலையத்தில் RGM–PTP மற்றும் FPRP மூலம் கொள்முதல் செய்யப்படும் 6-9 மாத வயதிற்கு உட்பட்ட உயர் மரபணு தகுதிகளை கொண்ட காளைக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

இ.குறைந்தபட்ச நிலையான நெறிமுறையின் கீழ் குறிப்பிடப்பட்ட அனைத்துநோய்களுக்கும் எதிராக பரிசோதனை செய்யப்பட்டு நோய்களின்றி இருக்கும் காளைக்கன்றுகளை மட்டுமே  ஒரு நிலையித்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு மாற்ற வேண்டும்.        

கன்று வளர்ப்பு நிலையம் மற்றும் தீவன உற்பத்தி அலகு, புதுக்குடி

அ. கன்று வளர்ப்பு நிலையம் NDP திட்டத்தின் கீழ் 60 உயர் மரபணு தகுதிகளை கொண்ட காளைகக்கன்றுகளை வளர்க்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆ. இந்நிலையத்தில் RGM–PTP மற்றும் FPRP மூலம் கொள்முதல் செய்யப்படும் 9 மாத வயதிற்கு மேற்பட்ட உயர் மரபணு தகுதிகளை கொண்ட காளைக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

 இ. முதல்கட்டமாக 10 ஏக்கர் பரப்பளவிலும் இரண்டாம்கட்டமாக 10 ஏக்கர் பரப்பளவிலும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தால் சொந்த தேவைக்காகவும் அருகிலுள்ள இதர ஒன்றியங்களுக்கும் விற்பனை செய்யவும் பசுந்தீவனப்புல் மற்றும் கட்டைப்புல் வளர்க்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது

ஈ. மூன்று மற்றும் நான்காம் கட்டத்தின்கீழ் 50 ஏக்கர் மற்றும் 40 ஏக்கர் பரப்பளவில் சொந்த தேவைக்காகவும் மற்றும் அனைத்து ஒன்றியங்களுக்கும் விற்பனை செய்யவும் பசுந்தீவனப்புல் தீவன விதைகள் மற்றும் கட்டைப்புல் வளர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

RGM-PTP:

  அ. RGM-PTP ஆனது NDP-PTP இன் தொடர்ச்சியாக இந்திய அரசால் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடி நிதியுதவியோடு சேலம், ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய 3 ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

ஆ. இத்திட்டத்தின் இலக்கானது 225 உயர் மரபணு தகுதிகளை கொண்ட காளைகக்கன்றுகளை கொள்முதல் செய்து பல்வேறு உறைவிந்து நிலையங்களுக்கு வழங்குவதாகும்.

இ. தற்போது வரை 27 உயர்ரக காளைக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 24 உயர்ரக காளைக்கன்றுகள் விநியோகத்திற்கு தயார் நிலையில் உள்ளன.

ஈ. இந்திய அளவில் RGM-PTPயின் கீழ் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் காளைக்கன்றுகளை கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.   

பொலிகாளைப்பண்ணை வாரியாக காளைக்கன்று விநியோகம்:

2012-13 - 2021-22

பொலிகாளைப்பண்ண

மாநிலம்

விநியோகம் செய்யப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கை

NDP-PTP யின் கீழ்

RGM-PTP யின் கீழ்

FPRP

யின் கீழ்

ABC

உத்திர பிரதேசம்

11

5

 

APLDA

ஆந்திர பிரதேசம்

12

5

 

BAIF

மகாராஷ்டிரா

4

 

 

KLDB

கேரளா

21

7

 

MLDB

மகாராஷ்டிரா

3

 

 

MP

மத்தியப் பிரதேசம்

3

 

 

ALAMADHI

தமிழ்நாடு

3

 

 

NJF

தமிழ்நாடு

130

 

 

SAG

குஜராத்

18

 

 

TNLDA

தமிழ்நாடு

43

5

102

TSLDA

தெலுங்கானா

2

 

 

WB

மேற்கு வங்கம்

21

 

 

ARDA - AMUL

குஜராத்

 

5

 

 

மொத்தம்

271

27

102