இணைய அலகுகள்
மத்திய பால்பண்ணை
இந்த மத்திய பால்பண்ணை 1963 ஆம் ஆண்டு பால் பெருக்குத்துறையினால் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை நகர் வாழ் பொது மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இப்பால்பண்ணை, ஆரம்ப காலத்தில் பால் பெருக்குத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தது. 1.7.1972 ஆம் ஆண்டில் கம்பெனி சட்டத்திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு பால் வள நிறுவனம் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு பால் பெருக்குத்துறையின் கீழ் இயங்கி வந்த வியாபாரச் சம்மந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு பால் வள நிறுவனம் 1/7/1972 முதல் தன்னுடைய நிர்வாகப் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. அத்தருணத்தில், பால்பெருக்குத்திட்டம் -1 தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட நிலையில் மத்திய பால்பண்ணையின் செயலாக்கங்களையும் மற்றும் பால் விநியோகத்தையும், தமிழ்நாடு பால்வள நிறுவனம் தன்னுடைய நிர்வாக பொறுப்பின் கீழ் எடுத்துக்கொண்டது.
பின்னர் பால் உற்பத்தி தொழிலில் கூட்டுறவு வளர்ச்சியின் கீழ் தேசிய பால்வள வாரியத்தின் பரிந்துரையின்படி மூன்று அடுக்குமுறை (Three-tier System) தமிழ் நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி கிராம நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள், மாவட்ட நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் கூட்டுறவு பால் உற்பத்தி இணையம் என்ற அமைப்பில் 1.2.1981 முதல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆரம்பிக்கப்பட்டு இதன் நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
மத்திய பால்பண்ணையின் செயல் திறன் விவரம்
மத்திய பால்பண்ணை ஆரம்ப நிலையில் நாள் ஒன்றுக்கு 50,000 லிட்டர் பாலினை பதப்படுத்தும் திறன் கொண்டதாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 2.00 லட்சமாக உயர்த்தப்பட்டது. உற்பத்தி திறன் 2.00 லட்சம் லிட்டராக இருந்தாலும், உற்பத்தி திறன் மேம்பாட்டின் மூலமாக தற்போது 3.60 லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு பதப்படுத்தப்பட்டு பால் பைகளில் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது.
மின் தடை ஏற்படும் தருணங்களில் பால்பண்ணையின் இயந்திர இயக்கம் எவ்வித தடையுமின்றி இயங்கும் வகையில் 500 KVA - 1 No., 275 KVA - 2 Nos திறன் கொண்ட மின் உற்பத்தி இயந்திரங்கள் (Generator) நிறுவப்பட்டுள்ளது.
பால் குளிர்விக்கும் அறை கொள்ளளவு - 3,75,000 லிட்டர்
வெண்ணெய் குளிரூட்டும் அறை கொள்ளளவு - 30 மெட்ரிக் டன்
பால் பவுடர் இருப்பு அறை கொள்ளளவு - 80 மெட்ரிக் டன்
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் - 3.5 லட்சம் லிட்டர் (நாள் ஒன்றுக்கு)
மத்திய பால்பண்ணை மத்திய அரசின் ISO 9001: 2015, HACCP IS 15000:1998 மற்றும் EMS : IS/ISO 14001 : 2015 தர சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். மேலும் தற்போது FSSC-22000 தரத்திற்கு தகுதி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் (2011-12) மத்திய பால்பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட திட்ட பணிகள்
1) 2011-12 தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டப்படி (NADP) மத்திய பால்பண்ணையில் 110 TR அம்மோனியா ப்ரிக் கம்ப்ரஸர் 2 எண்ணிக்கை 15-9-2012 அன்று கொள்முதல் செய்யப்பட்டு 24.12.2012 அன்று நிறுவப்பட்டது.
இதனால் பால் குளிர்விக்க தேவைப்படும் தண்ணீரின் குளிர்நிலை 1ºc முதல் 2ºc வரை பராமரிக்கப்படுகிறது இதனால் இந்திய தரச்சான்றுபடி நிர்ணயிக்கப்பட்ட பாலின் குளிர்நிலை பராமரிக்கப்பட்டு பாலின் தரம் உயர்த்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
-
இப்பால் பண்ணையில் தினசரி சுமார் 1 லட்சம் லிட்டர் 6% கொழுப்பு சத்துள்ள பால் (FCM) தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இப்பாலை தயாரிப்பதற்கு தேவைப்படும் வெண்ணெய் --20ºc குளிர்நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு 30 டன் கொள்ளளவு கொண்ட Butter Deep Freezer அறை ரூ.46.00 லட்சம் செலவில் 13/3/2013 அன்று நிறுவப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் 6% கொழுப்பு சத்துள்ள பால் தயாரிக்க தேவைப்படும் வெண்ணெய் முழுதரத்துடன் --20ºc –ல் பாதுகாக்கப்பட்டு பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
-
இப்பால் பண்ணையில் பாலின் நிலைத்தன்மையை நீடிக்க மணிக்கு 20,000 லிட்டர் திறன்கொண்ட பால் குளிரூட்டும் இயந்திரம் ரூ.2.00 லட்சம் செலவில் 22-6-2012 அன்று கொள்முதல் செய்யப்பட்டு நிறுவி 29-7-2012 முதல் இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் பதப்படுத்திய பாலின் குளிரூட்டும் தன்மை சுமார் 4ºc மேலும் குறைக்கப்பட்டு தரமான பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
-
இப்பாலை, மத்திய பண்ணையில் 2,60,000 லிட்டர் பால்பைகள் குளிர்பத அறையில் பாதுகாப்பாக வைக்க வசதி இருந்தது. மேலும் பால் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும், பாலை இந்திய தரச்சான்றிதழ்படி குளிரூட்டும் அறையில் வைத்து விநியோகம் செய்ய ஏதுவாக சுமார் 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிரூட்டும் அறை நிறுவப்பட்டு 13.8.2013 முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இதனால் தினந்தோறும் குறித்த நேரத்திற்கு தரத்துடன் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2011-2012 நிதி உதவி பெற்று இப்பால் பண்ணையில் முழுமையாக பயன்படுத்தப்பட்டு சென்னை வாழ்மக்களுக்கு தரமான பால் விநியோகம் செய்யப்படுகிறது.